
90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய சூப்பர்ஹீரோ சக்திமான் தொடரில் நடித்து அதிகம் ரசிகர்களை பெற்றவர் முகேஷ் கண்ணா. தற்போது அவருக்கு 67 வயது ஆகிறது.
நடிகர் முகேஷ் கண்ணா தற்போது வரை திருமணம் செய்யாமல் சிங்கிள் ஆக தான் வாழ்ந்து வருகிறார். அது ஏன் என ஒரு பேட்டியில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
அதற்கு அவர் ஓப்பனாக பதில் அளித்து இருக்கிறார்.
என்ன காரணம்?
நீங்கள் திருமணம் செய்து கொண்டால் committed தான். ஒரு பெண் பதிவிரதை ஆக இருக்க வேண்டும் என மக்கள் சொல்வார்கள். ஆனால் ஆண் அதே போல பதிவிரதத்தில் இருக்க வேண்டும்ம் என யாராவது சொல்கிறார்களா. 'I love my wife' என சொல்லிவிட்டு வேறு ஒருவருடன் சுற்றுகிறார்கள், cheating செய்கிறார்கள்.
"திருமணத்தின் மீது எனக்கு அதிகம் நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்யவில்லை என்றால் அதன் மீது நம்பிக்கை இல்லை என மக்கள் நினைக்கிறார்கள்."
"மனைவி என்பவள் தற்செயலாக வருபவள் அல்ல. அது தலையெழுத்தில் இருக்கும். என்ன நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும். என்னை திருமணம் செய்ய வேண்டிய பெண் எங்காவது இருப்பார். எப்போது விதி எங்களை ஒன்று சேர்க்கிறதோ. அது நடக்கும்" என முகேஷ் கண்ணா கூறியுள்ளார்.
Source: Entertainment News