
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் என இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ப்ரோமோவும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
ஓடிடி விலை
இந்த படத்தின் ஓடிடி உரிமையை விற்பனை செய்ய ரெட் ஜெயண்ட் நிறுவனம் முயற்சித்து வருகிறதாம். 250 கோடி ரூபாய் வரை விலைபோகும் என்கிற எதிர்ப்பார்ப்புடன் நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.
ஆனால் 110 கோடி ரூபாய் வரை தர அந்த நிறுவனம் முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Source: Entertainment News