அரசியல்

தமிழக அரசியல் களம் எப்போது சமூகமாகும் மாறும், தலைமை எப்போது அமையும் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.



ஊழல், சாராயம் காச்சினா நல்ல அரசியல்வாதியா?... விஜய்க்கு ஆதரவாக பேசிய சீரியல் நடிகர் சதீஷ் - Related Image

இன்று பதிவியேற்பு, நாளை பதவியேற்பு என செய்திகள் வந்தாலும் இப்போது வரை எதுவும் நடக்கவில்லை. ஆனால் அரசியல் களம் தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து பரபரப்பாகவே உள்ளது.

தனி கட்சியாக நின்று தனது பலத்தை காண்பித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பொறுப்பேற்க முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டே செல்வதால் மக்களும் கடும் வருத்தத்தில் உள்ளனர்.

சீரியல் நடிகர்

பல பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் சதீஷ் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்கணுமா? ரௌடியாக இருக்கணுமா? சாராயம் காச்சியிருக்கணுமா? தவறு செய்திருக்கணுமா? அதுதான் தகுதியா?

வாழ்க்கையிலும் அரசியலிலும் மக்களுக்கு சேவை செய்ய முதலில் நல்ல மனசு வேண்டும். ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே அது மிகப்பெரிய தகுதி தான்.

இது அரசியலுக்கு மட்டும் இல்லை, வாழ்க்கையில் நல்ல அப்பாவாக, நல்ல அம்மாவாக, நல்ல நண்பனாக இருக்க கூட நல்ல மனசு தேவை. மனசு சுத்தமாக இருந்தால் போதும். நான் இதுவரை இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்களித்து வந்தேன். அது கட்சிக்காக மட்டும் இல்லை, புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக, அவர் மீது இருக்கும் மரியாதைக்காக.

ஆனால் இனி அது தொடருமா என தெரியவில்லை என பேசியுள்ளார்.