CM விஜய் பதவியேற்று விழா

கடந்த மே 4ஆம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் 108 தொகுதிகளில் தவெக மாபெரும் வெற்றிபெற்றது. பெரும்பான்மைக்கு 118 தேவை என்பதால் CPI, CPI(M), விசிக, காங்கிரஸ், IUML ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றது.



முதலமைச்சராக பதவியேற்ற விஜய், சரிந்த சன் டிவி ஷேர்.. ஷாக் கொடுத்த ட்ரேடிங் விவரம் - Related Image

இதன்பின், கடந்த மே 10ஆம் தேதி விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிகழ்வு உலகளவில் மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது. இது ஒரு சாதனை நிகழ்வு என்றும் பலரும் கூறினார்கள்.

பல மில்லியன் மக்கள் இந்த நிகழ்ச்சியை வெவ்வேறு தொலைக்காட்சிகளில் கண்டு மகிழ்ந்தனர். அதனை வீடியோவாகவும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

சரிந்த சன் டிவி ஷேர்

இந்த நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின்சன்டிவியின் ஷேர் 1% சதவீதம் குறைந்துள்ளதாக பிரபல ட்ரேடிங் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. மேலும்,இந்த தகவல் சினிஉலகத்தின் சொந்த கருத்து அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.