எதிர்நீச்சல் தொடர்கிறது

அட அடுத்தடுத்து பிரச்சனைகளை கிளப்பாமல் ஒரு பிரச்சனையை முடித்து அடுத்து பிரச்சனையை தொடங்குங்கள் என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு பரபரப்பின் உச்சமாக செல்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.



அறிவுக்கரசி போடும் அடுத்த பிளான், கெத்து காட்டிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ - Related Image

ஜனனி குணசேகரனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என தீர்மானமாக உள்ளார். அதேசமயம் எல்லா விஷயத்தையும் மறந்து இருக்கும் ஈஸ்வரியை கைக்குள் வைத்து தன் மீது உள்ள வழக்கை காலியாக்க குணசேகரன் பக்காவாக காய் நகர்த்தி வருகிறார்.

உடல்நலக் குறைவு நாடகம் போட்டு ஈஸ்வரி, ரேணுகா, நந்தினியை வழக்கில் இருந்து வெளியேற வைத்துவிட்டார்.

புரொமோ

இப்போது ஈஸ்வரி, தர்ஷன் திருமணத்தை பார்க்க விரும்பியதால் மீண்டும் வீட்டிலேயே சிம்பிளாக திருமணம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் குணசேகரன் அனைவருக்கும் புதிய உடை வாங்கி வருகிறார்.

எல்லோருக்கும் விசாலாட்சி ஜோடியாக புதிய உடைகளை கொடுக்க ஜனனிக்கும் குணசேகரன் கொடுக்கிறார். அதை வாங்கிய ஜனனி வீசி எறிந்து உங்க நாடகத்திற்கு நான் ஆள் இல்லை என கெத்து காட்டுகிறார்.

இன்னொரு பக்கம், கம்பெனியில் அறிவுக்கரசி தர்ஷன் குறித்து அன்புக்கரசியிடம் பேசுவதாக தெரிகிறது, அவர்கள் என்ன பிரச்சனை தொடங்கப்போகிறார்களோ தெரியவில்லை.

இதோ இன்றைய எபிசோட் புரொமோ,