


சமீபத்தில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் சூர்யா, RJ பாலாஜி உட்பட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஆனால் படத்தின் ஹீரோயின் ஆன நடிகை த்ரிஷாவு மட்டும் வரவில்லை. அது பெரிய பேசுபொருள் ஆனது.

அழைக்கவே இல்லை!
இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கும் படக்குழுவுக்கும் இருக்கும் பிரச்சனை த்ரிஷாவின் பதிவால் உறுதி ஆகி இருக்கிறது.
ஆடியோ லாஞ்சுக்கு போகாதது ஏன் என ஒருவர் கேட்க, த்ரிஷா அதற்கு பதில் அளித்துள்ளார். "எனக்கு அழைப்பே வரவில்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது த்ரிஷாவுக்கு மட்டும் தனியாக டீசர் வெளியிட்டு இருக்கும் நிலையில், அதற்கு நெட்டிசன் ஒருவர் 'த்ரிஷா படத்தில் இருப்பதையே மறந்துவிட்டேன்' என கமெண்ட் செய்திருக்கிறார்.
"நானும் மறந்துவிட்டேன். இப்போதாவது அவர்கள் reminder செட் செய்தார்களே" என த்ரிஷா பதிவிட்டு உள்ளார்.
Source: Entertainment News