முதலமைச்சர் விஜய்

'C. ஜோசப் விஜய் என்னும் நான்' எனக்கூறி தமிழ்நாட்டின் முதலமைச்சராக தளபதிவிஜய்அவர்கள் பதவியேற்றுள்ளார்.



தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி விஜய் போட்ட முதல் அதிரடி கையெழுத்து.. வேற லெவல்! - Related Image

அவருடன் இணைந்து செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, அருண்ராஜ், வெங்கட் ராமன், கீர்த்தனா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

முதல் அதிரடி கையெழுத்து

முதல்வராக பதவியேற்ற விஜய் அவர்கள், 200 யூனிட்கள் இலவசம் என்கிற திட்டத்திற்கு தன்னுடைய முதல் கையெழுத்தைப் போட்டுள்ளார்.

இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் என தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார். மேலும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் திட்டத்திலும் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.