கடந்த ஆண்டு மே 1-ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசி குமாரின் டூரிஸ்ட் பேமிலி ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியானது.

ரெட்ரோ



ஒரு வருடத்தை கடந்த ரெட்ரோ - டூரிஸ்ட் பேமிலி.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா - Related Image

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, பிஜு மேனன் ஆகியோர் ரெட்ரோ படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 104 கோடி வசூலித்தது.

டூரிஸ்ட் பேமிலி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசி குமார்,சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் என பலரும் நடித்து மே 1 2025ஆம் ஆண்டு வெளிவந்த படம் டூரிஸ்ட் பேமிலி.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால், உலகளவில் இப்படம் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.