


சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியிலும் ஒரு கதைக்களத்தை மையப்படுத்தி தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி படிப்பை மையப்படுத்தி, படிப்பின் முக்கியத்துவம் குறித்து சொல்லும் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது சின்ன மருமகள் சீரியல்.

தமிழ் படித்துக்கொண்டிருக்கும் போதே அவர் மீது ஆசைப்பட்டு சேது திருமணம் செய்தார். ஆனால் அதன்பிறகு தமிழ் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களுமே சோகத்தை தான் கொடுத்துள்ளது.
இப்போது தனது அப்பா சொல்லை மீறி உன் தோழிக்கு நீ திருமணம் செய்து வைத்ததால் தான் அப்பா ஜெயிலுக்கு சென்றுள்ளார் என சேது கோபப்பட்டு தமிழை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
புரொமோ
தமிழை காதலித்து திருமணம் செய்த சேது இப்போது அவரை சுத்தமாக வெறுக்கிறார்.
இதனால் மறு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் சேதுவிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் உறவினர்கள் சூழ நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதனை பார்த்த பாட்டி கோபத்தில் தட்டை தட்டிவிட்டு இந்த குடும்பத்தை அத்துவிடுகிறேன் என கூறி செல்கிறார்.
தமிழ் வீட்டிற்கு சென்ற அப்பத்தா உன்னை போல நானும் அந்த குடும்பத்தை அத்துவிட்டு வந்துவிட்டேன் என கூற தமிழ் அவரை ஏற்றுக்கொள்கிறார்.
Source: Entertainment News