


எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன் வழக்கில் இருந்து தப்பிக்க கூடாது அவர் செய்த தவறுகளுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என போராடுகிறார் ஜனனி.

அந்த போராட்டத்திற்கு இடையில் குணமான ஈஸ்வரி எல்லாவற்றையும் மறந்து குணசேகரன் ஆடும் ஆட்டத்திற்கு ஆடி வர அதைப்பார்த்து ஜனனி மிகுந்த மன வேதனை அடைகிறார்.
குணசேகரனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றால் ஈஸ்வரிக்கு எல்லா உண்மையும் தெரிவ வேண்டும் என எல்லாவற்றையும் கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி கடைசியில் ஜனனி பொய் கூறுகிறார், நாடகம் போடுகிறார் என அவரை ஒரு தவறானவர் போலவே சித்தரிக்கிறார்.
ஈஸ்வரி பேசியதை கேட்டு மிகவும் மனம் உடைந்து போகிறார் ஜனனி.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், வக்கீல் ஜனனி நீதிமன்றத்திற்கு வராமல் இருந்தால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என கூறுகிறார். இதனால் கதிர் மற்றும் ஞானம் அடுத்து என்ன செய்யலாம் என பிளான் போடுகிறார்கள்.
வீட்டில் விசாலாட்சி மருமகள்கள் ஒவ்வொருக்கொருவர் மன கசப்புடன் இருப்பதை கண்டு வருந்துகிறார். அந்த நேரம் ஜனனி, சக்தி இதுபோல் தவறு செய்தால் கூட அவனுக்கு எதிராக நிற்க நான் தயாராக தான் இருப்பேன் என கூற ஈஸ்வரி செம ஷாக் ஆகிறார்.
Source: Entertainment News