


ரோஜா
1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்ற இவர், அதன்பின் அரசியலுக்கு சென்றார். தற்போது YSR Congress கட்சியில் முக்கிய தலைவராக இருந்து வருகிறார்.

சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தரோஜா, இப்போது ஒருவர் தாயாக தனது மகளின் சாதனையை பெருமையுடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ரோஜா மகள் சாதனை
"இந்த அன்னையர் தினம் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. என் மகள் அன்ஷு செல்வா, அமெரிக்காவில் உள்ள Indiana University Bloomington பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் (மாண்புமிகு பட்டம்) பிரிவில் மிக உயர்ந்த சிறப்புடன் பட்டம் பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்ல, அந்த பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'ஹெர்மன் பி. வெல்ஸ் சிறந்த இறுதி ஆண்டு மாணவர் விருது' பெற்றுள்ளார். இந்த விருதை பெறும் முதல் இந்திய மாணவி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அவரது கல்வி பயணத்தின்போது, சமத்துவம் மற்றும் தொழில்நுட்ப தலைமைத்துவத்திற்கான 'மோரீன் பிகர்ஸ் பட்டியல்' பாராட்டு, 'நிறுவனர் அறிஞர்' அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளையும் பெற்றுள்ளார்.
ஒரு தாய்க்கு தன் குழந்தை கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நல்ல பண்புகள் ஆகியவற்றின் மூலம் இவ்வளவு உயரத்தை அடைவதை காண்பதை விட பெரிய பரிசு எதுவும் இல்லை. நன்றி, என் செல்ல மகளே அன்ஷு.. இந்த அன்னையர் தினத்தை இவ்வளவு உணர்ச்சிகரமாகவும், சிறப்பாகவும் மாற்றியதற்கு இன்று நான் ஒரு பெருமையான தாய்.. என்றும் நன்றியுடன்" என கூறியுள்ளார்.
View this post on InstagramA post shared by Roja Selvamani (@rojaselvamani)
View this post on InstagramA post shared by Roja Selvamani (@rojaselvamani)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Roja Selvamani (@rojaselvamani)
Source: Entertainment News