முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்

இன்று தளபதி விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்தது.



தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்.. நடிகை த்ரிஷா வருகை - Related Image

ஆனாலும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வேண்டும் என்பதால் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ், விசிக, IUML, CPI மற்றும் CPI(M) ஆகிய கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன.

இதன்மூலம் 120 இடங்கள் கிடைத்த நிலையில், ஆளுநரை சந்தித்து தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதைவிஜய்நிரூபித்தார்.

த்ரிஷா வருகை

இந்த நிலையில், இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பதவியேற்கும் விழாவில் அரசியல் பிரமுகர்கள், சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த விழாவில் நடிகை த்ரிஷா வருகை தந்துள்ளார்.