CM விஜய்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று மாபெரும் சாதனையை நிகழ்த்தி காட்டினார் முதலமைச்சர் விஜய். இதன்பின் பெரும்பான்மைக்கு 118 தேவை என்பதால் CPI, CPI(M), விசிக, காங்கிரஸ், IUML ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.



விஜய் CM ஆவதை நான் தடுக்கவில்லை.. நான் தரங்கெட்ட ஆள் கிடையாது! ரஜினி பரபரப்பு பேட்டி - Related Image

தவெக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் மூன்று நாட்களில் தடுமாறி கொண்டிருந்த நேரத்தில் இரண்டு பெரிய கட்சிகளை இணைக்க ரஜினிகாந்த் முயற்சி செய்ததாகவும், விஜய் முதலமைச்சர் ஆகாமல் தடுப்பதற்காக வேலை செய்ததாகவும் விமர்சனங்கள் இணையத்தில் பரவியது. மேலும், விமான நிலையத்தில் விஜய் முதலமைச்சர் ஆனதற்கு கூட ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்காமல் சென்றது சர்ச்சையானது.

இந்த நிலையில், தன்னை பற்றி உலா வந்த அனைத்து விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை தனது வீட்டில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.



விஜய் CM ஆவதை நான் தடுக்கவில்லை.. நான் தரங்கெட்ட ஆள் கிடையாது! ரஜினி பரபரப்பு பேட்டி - Related Image

ஸ்டாலினுடன் சந்திப்பு

இதில், "தேர்தல் முடிவு வந்தபின் நான் ஸ்டாலின் சாரை சென்று சந்தித்தது, அது விமர்சிக்கப்பட்டது. ஸ்டாலின் என்னுடன் 40 வருட நண்பர். அவர் கொளத்தூரில் தோல்வியை சந்தித்தது எனக்கு வருத்தத்தை தந்தது. அதனால் தான் நேரில் சென்று சந்தித்தேன். அதற்காக நான் விஜய் CM ஆவதை தடுப்பதாகவும், இரண்டு பெரிய கட்சிகளை இணைக்க முயற்சி செய்ததாகவும் விமர்சனங்கள் வந்தன. அந்த சூழலில் இதையெல்லாம் நான் பேச முடியுமா? அப்படி பேசுகிற ஒரு தரங்கெட்ட ஆள் ரஜினிகாந்த் கிடையாது".

வாழ்த்து சொல்லவில்லை

நான் விமான நிலையம் செல்லும்போது நான் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என்பது. விஜய் வெற்றிபெற்றவுடன் நான் என்னுடைய வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தேன். விமான நிலையத்திற்கு செல்லும்போது அங்கிருந்தவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டு இருந்தார், அவரை பார்க்க மீடியா ஆள் போல் தெரியவில்லை. அதனால் நான் பதில் சொல்லாமல் கடந்து போய்விட்டேன்.

எனக்கு பொறாமையா

மற்றொரு விஷயம், எனக்கு விஜய் மேல் பொறாமை என்று. நான் அரசியலில் இல்லை, அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என்று சொல்லியாச்சு. அரசியலில் நான் இல்லாதபோது எனக்கு எதற்கு அவர் மேல் பொறாமை. ஒரு வேலை கமல் ஹாசன் CM ஆகியிருந்தால் பொறாமை வந்திருக்குமோ என்னவோ. அப்பகூட வந்திருக்காது. எனக்கும் விஜய்க்கும் 25 வருட வித்தியாசம். ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. அவரை நான் சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன், அவர் CM ஆனதில் எனக்கு என்னை பொறாமை. அதுவும் இந்த சின்ன வயதில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் பண்ணதை விட மிகப்பெரிய சாதனை. சென்டரில் BJP, இங்கு இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வந்து வெற்றிபெற்றுகிறார். அதுவும் நம் சினிமா துறையில் இருந்து வந்திருக்கிறார். அது எனக்கு பொறாமை இல்லை, ஆச்சரியம் கலந்த சந்தோஷம். அதனால் எனக்கு பொறாமை எல்லாம் ஒன்றும் இல்லை. விஜய் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதை எல்லாம் அவர் முழுமையாக பூர்த்தி செய்வார் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.