Patriot

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் Patriot. இப்படத்தில் நயன்தாரா, பகத் பாசில், ரேவதி, குஞ்சாகோ போபன் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.



முதல் நாள் Patriot திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி பெரிதும் எதிர்பார்ப்புடன் நேற்று திரையரங்கில் இப்படம் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களில் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வசூல்

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ்வசூல்குறித்து தகவல் வெளிவரும். அந்த வகையில், Patriot திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாள் இப்படம் உலகளவில் ரூ. 30 கோடி முதல் ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.