கருப்பு

2026-ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக கருப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான இப்படம் கடந்த மே 15ஆம் தேதி வெளியானது.



20 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

பல தடைகளை தாண்டி வெளியான கருப்பு திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். முதல் நாள் முதல் ஷோவிலிருந்து இன்று வரை இப்படம்பாக்ஸ்ஆபிஸில் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, இப்படியொரு சூர்யா திரைப்படத்தை பார்த்து பல வருடங்கள் ஆகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் வசூலில் தொடங்கி இதுவரை கருப்பு திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது 20 நாட்களை கடந்திருக்கும் கருப்பு உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 20 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 319 கோடி வசூல் செய்துள்ளது.