

சூப்பர்ஸ்டார் ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதாக முதலில் கூறி அதன் பிறகு உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் நுழையப்போவதில்லை என தெரிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
அதன் பிறகு படங்களில் நடிப்பதில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யின் தவெக தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்த நிலையில், "அவரை பார்த்து எனக்கு பொறாமை இல்லை, அவர் ஜெயித்தது எனக்கு ஆச்சர்யம் மட்டுமே" என ரஜினி பேசி இருந்தார்.

மேலும் தானும் அரசியலுக்கு வந்திருந்தால் நிச்சயம் முதலமைச்சர் ஆகி இருப்பேன் எனவும் அவர் கூறி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் மனைவி ஒரு அமைப்பை தொடங்கி இருந்தார்.
போட்டோ பயன்படுத்த கூடாது
இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதில் எந்த அரசியல் கட்சிக்கோ அமைப்புக்கோ ரஜினியின் போட்டோவை பயன்படுத்த கூடாது என தெரிவித்து இருக்கின்றனர்.
Source: Entertainment News