

சனம் ஷெட்டி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான படங்களில் ஒன்று தான் அம்புலி.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்த சனம் ஷெட்டி மாடலிங் துறையிலும் கலக்கியுள்ளார்.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு 64 நாட்கள் விளையாடினார்.
நடிகையாக மட்டுமில்லாமல் சமூக அக்களை கொண்ட ஒரு பெண்ணாகவும் உள்ளார். நாட்டில் நடக்கும் விஷயங்களில் அவருக்கு தவறு என்று தோன்றும் விஷயங்கள் குறித்து தைரியமாக பேசுவார், குரல் கொடுப்பார்.
உடல்நலம்
சினிமாவில் சனம் ஷெட்டி பெரிய அளவில் ஜொலிக்கவில்லை, ஆனால் இன்ஸ்டாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார், அதாவது மக்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஒர்க் அவுட் வீடியோ, கிளாமர் புகைப்படங்கள் என நிறைய வெளியிட்டு வருவார்.
எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சனம் ஷெட்டி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சின்ன சர்ஜரி நடக்க உள்ளதாம், மருத்துவமனையில் எடுக்கப்பட்ட போட்டோவை பதிவிட ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர்.
View this post on InstagramA post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)
View this post on InstagramA post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)
Source: Entertainment News