


எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தல், கொலை, ஆணாதிக்கம், பெண் அடிமை, குடும்பத்தையே ஏமாற்றுவது, சொத்து என இவற்றை வைத்தே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கதைக்களம் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.

குணசேகரன் குடும்பத்தில் ஒருவரை கடத்தி வைத்து தனது காரியத்தை சாதிப்பது போல ராணாவும் அதே ரூட்டில் பயணிக்கிறார். கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் ஜனனி தர்ஷினியை தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.
ஆனால் ராணா தான் தர்ஷினியை கடத்தி வைத்து குணசேகரன் குடும்பத்திற்கு ஆட்டம் காட்டி வருகிறார். இப்போது குணசேகரனை காப்பாற்றுவது போல நடித்து வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டார்.
புரொமோ
தற்போது சீரியலின் ஸ்பெஷல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், தர்ஷினியை கடத்தி லைத்த இடத்தை தேடி ஜனனி வந்ததால் ராணா செம ஷாக் ஆகிறார், அவர்களை காலி செய்யவும் கூறுகிறார்.
அதேசமயம் குணசேகரன் வீட்டிற்கு வந்த ராணா தர்ஷினியை கடத்தி வைத்தது ஜனனி தான் என கூறுகிறார். இதைக்கேட்டதும் ஈஸ்வரி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.
Source: Entertainment News