

பெத்தி
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம் சரண் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பெத்தி.

இப்படத்தை இயக்குநர் புச்சிபாபு இயக்கியிருந்தார். சிவராஜ்குமார், ஜான்வி கபூர் இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போது, அப்படத்தின் வசூல் விவரங்கள் குறித்து தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில் பெத்தி திரைப்படத்தின் வசூல் பற்றி முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் பெத்தி இதுவரை உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source: Entertainment News