ஆண்பாவம் பொல்லாதது

கடந்த வாரம் திரைக்கு வந்த ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டது.



ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்க ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல்

முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் குறித்து விவரங்களை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 9 நாட்களை கடந்திருக்கும் ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 9 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.