

சர்வம் மாயா
நிவின் பாலி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் சர்வம்மாயா. இப்படத்தை இயக்குநர் அகில் சத்யன் இயக்கியிருந்தார்.

அஜூ வர்கீஸ், வினீத், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் மூலம் ரியா சுபு நடிகையாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
சர்வம் மாயா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் நடிகர் நிவின் பாலி. இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சர்வம் மாயா இதுவரை உலகளவில் ரூ. 125 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Entertainment News