எதிர்நீச்சல்

ஆதி குணசேகரனின் அடியாட்களிடம் இருந்து தப்பித்தஜனனி, தேவசகாயமிடம் மாட்டிக்கொண்டார். முதலில் இவர் ஜனனிக்கு உதவப்போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அவரும் வில்லன்தான் என பின் தெரியவந்தது.



தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ - Related Image

தேவசகாயமிடம் தான் மட்டும் மாட்டிக்கொள்ளவில்லை, கலெக்டர் மதிவதனியும் மாட்டிக்கொண்டுள்ளார் என்பதை அறிந்து, அவரையும் காப்பாற்றினார் ஜனனி.

தப்பித்த ஜனனி, மதிவதனி

இந்த நிலையில், அங்கிருந்து தப்பித்த இருவரும் தற்போது பாதுகாப்பாக வந்து காவலர்களை சந்தித்துவிட்டனர். மேலும், அமுதாவை கொன்றது, அவருடைய கணவர்தான் என தெரிந்துவிட்டது. இதனால், இந்த வழக்கில் குற்றவாளியென தேடப்பட்டு வந்த ஜனனி, விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின், சக்தி ஜனனியிடம் போன் மூலம் பேசி உடனடியாக சந்திக்க வேண்டும் என கூறுகிறார்.

ஜனனி உயிருடன் இருப்பது, கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது என அனைத்தையும் அறிந்து ஆடிப்போய் இருக்கிறார் ஆதி குணசேகரன். இனி இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

View this post on InstagramA post shared by 𝗻𝗮𝘃𝗶 (@ethirneechal___fp)

View this post on InstagramA post shared by 𝗻𝗮𝘃𝗶 (@ethirneechal___fp)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by 𝗻𝗮𝘃𝗶 (@ethirneechal___fp)