தலைவர் 174

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 173வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.



அடுத்த படத்திற்காக ரஜினி வாங்கும் சம்பளம்.. தமிழ் சினிமாவில் இதுதான் அதிகம் - Related Image

ஆனால், அதற்கு முன்பே ரஜினியின் 174வது படத்தின் புரோமோ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.நெல்சன்திலீப்குமார் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் தலைவர் 174.

ரஜினியின் சம்பளம்

இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 80ஸ் கெட்டப்பில் இருவரும் இருந்ததாக தகவல் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தனது 174வது படத்திற்காக ரஜினிகாந்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ. 225 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் தமிழ் சினிமாவில் நடிகர் வாங்கும் அதிகப்படியான சம்பளமாகும்.