

நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தற்போது அதிகம் பட வாய்ப்புகள் வருகிறது.
இருப்பினும் கெஸ்ட் ரோலில் இனி நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி கூறிவிட்டதால் அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக குறைந்து வருகிறது.

ராமாயணம்
விஜய் சேதுபதி அடுத்து ஹிந்தியில் ரன்பீர் கபூர் நடிக்கும் ராமாயணம் படத்தில் விபீஷணன் ரோலில் நடிக்க போவதாக சமீபத்தில் செய்தி பரவியது.
ஆனால் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை என விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்து இருக்கிறார். இப்படி ஒரு செய்தி எப்படி பரவியது என தனக்கு தெரியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.
இந்த படத்தில் சீதையாக சாய் பல்லவி, ராவணன் ஆக KGF புகழ் யாஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Source: Entertainment News