நடிகர் விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய பிறகு, அவரை பற்றிய பேச்சு தேசிய அளவிலும் வர தொடங்கி இருக்கிறது.

அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்ததால் அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாமல் போனது. அதனால் ரசிகர்கள் தான் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது வழக்கு திரும்ப பெறப்பட்டு படம் மீண்டும் சென்சார் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.



விஜய் முதலமைச்சர் ஆவாரா? நடிகர் சிவகுமார் ஒரே வரியில் அளித்த பதில் - Related Image

நடிகர் சிவகுமார் பேட்டி

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை பற்றியும், அவர் முதலமைச்சர் ஆவாரா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகர் சிவகுமார் பதில் அளித்து இருக்கிறார்.

"அவர் (முதலமைச்சராக) வந்தே ஆகணும் என மக்கள் நினைத்தால் வந்துவிடுவார்" என ஒரே வரியில் அவர் பதில் அளித்து இருக்கிறார்.