நடிகர் சிம்பு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சிம்பு அமெரிக்காவில் AI பற்றிய படிப்பை மேற்கொண்டு வருகிறார் என ஒரு தகவல் சமீபத்தில் பரவியது.

அடுத்து சிம்பு அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி என பல முக்கிய இயக்குனர்கள் உடன் லைன் அப் வைத்து இருக்கிறார்.



ஹிட் கொடுத்த இளம் இயக்குனருடன் சிம்பு கூட்டணி.. யார் பாருங்க - Related Image

Dude இயக்குனர்

இந்நிலையில் சிம்பு அடுத்து Dude பட புகழ் இயக்குனர் கீர்த்திஸ்வரன் உடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Dude படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் நல்ல வசூலை தான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு - கீர்த்திஸ்வரன் கூட்டணி சேரும் படத்திற்கு சாய் அபயங்கார் தான் இசையமைக்க இருக்கிறாராம்.