

சூர்யா
மிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சூர்யா 46 மற்றும் 47 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் சூர்யா. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூர்யா - ஜோதிகா திருமணம்
சூர்யா - ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், அவர்கள் காதல் கல்யாணத்திற்கு யார் முக்கிய காரணம் என்பதை, சூர்யாவின் தந்தையும், மூத்த நடிகருமான சிவகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "சூர்யா - ஜோதிகா காதல் கல்யாணத்துக்கு முக்கிய காரணமே ராதிகாதான். உயிரிலே கலந்தது படப்பிடிப்பில் தனியா இருந்த சூர்யாகிட்ட, ஜோதிகாகிட்ட போய் பேசுன்னு தூண்டிவிட்டது அவங்கதான். நான் என்னோட சினிமா வாழ்க்கையில் 150 கதாநாயகிகளை லவ் பண்ற மாதிரி நடித்திருக்கேன். அப்படி இருக்கும்போது, என் மகனோட காதலுக்கு என்னால் எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்" என கூறியுள்ளார்.
Source: Entertainment News