

காணாமல் போகும் கோமதி
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் கோமதி. ஆனால், அவர் செய்த தவறின் காரணமாக பாண்டியன், கோமதியிடம் பேசாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், கோமதி காணாமல் போய்விட்டார் எனகாந்திமதிகூற, அனைவரும் கோமதியை தேடுகிறார்கள். கதிர் உடனடியாக தனது தந்தைக்கு இந்த விஷயத்தை தெரிவிக்க, பாண்டியனும் வீட்டிற்கு வருகிறார்.
ரூ. 10 லட்சத்தை கேட்ட பாண்டியன்
அம்மா காணாமல் போக இவர்தான் காரணம் என கூறி செந்தில் மற்றும் கதிர் இருவரும் பாண்டியனை திட்டுகிறார்கள். இந்த சமயத்தில் கோமதி வீட்டிற்கு வந்துவிடுகிறார்.
கதிர் மற்றும் செந்திலின் பேச்சால் மனமுடைந்துபோன பாண்டியன், இருவருக்கும் தான் கொடுத்த ரூ. 10 லட்சத்தை இன்னும் இரண்டே மாதத்தில் திரும்ப தரவேண்டும் என கோபத்துடன் கூறிவிடுகிறார்.
Source: Entertainment News