தலைவர் 173

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களாக வலம் வருபவர்கள்.



ரஜினியின் 173வது படத்தில் இருந்து விலகியது ஏன்?... ஓபனாக கூறிய சுந்தர்.சி - Related Image

இவர்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைகிறார்கள், சேர்ந்து நடிக்கப்போகிறார்கள் என முதலில் தகவல்கள் வந்தன. பிறகு கமல்ஹாசன் படம் தயாரிக்க ரஜினி படத்தில் நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது.

பிறகு அதிரடியாக ஒரு புகைப்படம் வெளியானது, ரஜினி, கமலுடன் இணைந்து சுந்தர்.சி இருக்கும் புகைப்படம் வெளியானது. ரஜினி படம் நடிக்க கமல் தயாரிக்க சுந்தர்.சி இயக்கப்போகிறார் என்றனர்.

ஆனால் சில காரணங்களால் சுந்தர்.சி படத்தில் இருந்து திடீரென வெளியேறினார், ஒரு அறிக்கையும் வெளியிட்டார். தற்போது ரஜினியின் 173வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார்.

காரணம்

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுந்தர்.சியிடம் தலைவர் 173வது படத்தில் இருந்து விலகியது குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.

அதில், சங்கமித்ரா படத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் அதற்காக தலைவர் 173 படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள், ஆனால் அதில் உண்மையில்லை. இரண்டு வருடங்களுக்கு எனக்கு கமிட்மென்ட் சரியாக இருக்கிறது.

சங்கமித்ரா படத்தை இப்போதைக்கு ஆரம்பிப்பதாக இல்லை. எனவே அதற்கும் தலைவர் 173க்கும் கனெக்‌ஷன் இல்லை என கூறியுள்ளார்.