தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகைராதிகாசரத்குமார் கதையின் நாயகியாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் தாய் கிழவி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.



3 நாட்களில் பிளாக்பஸ்டர் ஹிட்டான தாய் கிழவி.. வசூல் எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பாலசரவணன், ரைச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

3 நாட்கள் வசூல்

முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள்.

இந்நிலையில், 3 நாட்களில் தாய் கிழவி படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் ரூ. 20+ கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.