சுரேஷ் சங்கையா

ஒரு கிடாயின் கருணை மனு என்கிற படத்தை இயக்கி ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெற்றார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இதை தொடர்ந்து சத்திய சோதனை என்கிற படத்தை இவர் இயக்கியிருந்தார்.



மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் குடும்பத்துக்கு உதவிய நடிகர் யோகி பாபு.. - Related Image

இவர் கடந்த 2024ஆம் ஆண்டு கல்லீரல் செயலிழப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய இழப்பு பெரும் துயரத்தை ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் கொடுத்தது.

உதவி செய்த யோகி பாபு



மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் குடும்பத்துக்கு உதவிய நடிகர் யோகி பாபு.. - Related Image

இயக்குநர் சுரேஷ் சங்கையா கடைசியாக இயக்கிய திரைப்படம் 'கெணத்த காணோம்'. இப்படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மகளின் கல்வி செலவிற்காக யோகி பாபு ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளார். யோகி பாபுவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.