

சின்னத்திரையில் படம்
வெள்ளித்திரையில் கொண்டாட்டத்துடன் படம் பார்ப்பது ஒருவிதமான சந்தோஷமான விஷயம் என்றால், சின்னத்திரையில் படம் பார்ப்பது என்பது தனி சந்தோஷம்தான்.

அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பத்துடன் சேர்ந்து விளம்பர இடைவேளையுடன் படம் பார்ப்பது என்பது, அந்த மகிழ்ச்சியை சொல்லில் அடக்க முடியாது. அப்படி தொலைக்காட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று படம் பார்ப்பவர்களுக்கு இந்த வாரம் செம ட்ரீட் காத்திருக்கிறது.
இந்த வாரம் சன் டிவியில்
ஆம், சன் டிவியில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று, மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம் வாங்க.
காலை 9.30 மணிக்கு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த நாட்டாமை. பிற்பகல் 3.00 மணிக்கு விஷால் நடித்த மருது திரைப்படம். மாலை 6.30 மணிக்குதனுஷ்நடித்த ராயன் திரைப்படம் என மூன்று சூப்பர்ஹிட் படங்கள் சன் டிவியில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது.
Source: Entertainment News