

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக உள்ளது அய்யனார் துணை சீரியல்.

கதையில் பல்லவன் தனது தோழியை அழைத்துக்கொண்டு ஹோட்டல் சென்றதால் பெரிய பிரச்சனையில் சிக்கினார். அவர் ஹோட்டலில் இருந்த நேரம் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக போலீஸ் தேட வர பல்லவன் சிக்கிக்கொள்கிறார்.
அவரை போலீஸ் நிலையத்தில் இருந்து எப்படியோ அவரது அண்ணன்கள் வெளியே கொண்டு வந்துவிட்டனர். ஆனால் பல்லவனிடம் அவரது அண்ணன்கள் பேச மறுக்கிறார்கள், இதனால் அவர் அறையில் அடைந்தபடி உள்ளார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், நிலாவிற்காக வீட்டை அடமானம் வைக்க நடேசன், சேரன், சோழன் வங்கிக்கு செல்ல இன்னும் வீடு நடேசன் பெயரில் மாறாமல் பத்திரம் சரியாக இல்லாததால் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதனால் சேரன்-சோழன்-நடேசன் 3 பேரும் கடும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டனர். வினாதியிடம் பேசிப் பார்க்கலாம் என அழைத்துச் சென்ற சோழன் மீண்டும் அவரை கடையில் இறக்கிவிட்டு அய்யய்யோ இவளை சமாளிக்கவே முடியவில்லை.
அவள் சொல்லதை எல்லாம் நீ செய்ய வேண்டும் என்றால் அவ்வளவு தான் பாண்டியிடம் கூற அதைக்கேட்டு வானதி இன்னொரு பிரச்சனையை கிளப்பி கிளம்பிவிடுகிறார்.
கடைசியாக பல்லவனிடம் பாண்டி பேசும் எமோஷ்னல் காட்சிகள் இடம்பெறுகின்றன.
Source: Entertainment News