எதிர்நீச்சல்

மருத்துவமனையில் உள்ள ஈஸ்வரியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் உள்ளது என மருத்துவர் கூறியது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது, அவரை முழுமையாக காப்பாற்ற ஒரு மிகப்பெரிய தொகையை மருத்துவமனைக்கு கட்டவேண்டும் என மருத்துவர் கூறியிருந்தார். இதை கேட்டவுடன் அந்த பணத்தை எப்படி ஏற்பாடு செய்யப்போகிறோம் எனரேணுகாமற்றும் நந்தினி இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.



திடீரென நல்லவராக மாறிய ஆதி குணசேகரன்.. சந்தேகத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ - Related Image

இதற்கிடையில், இந்த குடும்பத்தில் உள்ள மூத்தவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என ஜோதிடர் கூறியிருந்தார். ஆனால், இந்த விஷயம் குணசேகரனுக்கும், அம்மாவுக்கும் தெரியவேண்டாம் என ஞானம் மற்றும் கதிர் கூறினார்கள். இதை மறைந்திருந்து கேட்ட கரிகாலன் அதனை குணசேகரனிடம் கூறிவிட்டார்.

ஆதி குணசேகரனின் மாற்றம்

இந்நிலையில், இந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கட்டும், மருத்துவமனையில் உள்ள என் மனைவி ஈஸ்வரியும் நலமுடன் இருக்கட்டும் என குணசேகரன் பேசுகிறார். அதுமட்டுமின்றி ஈஸ்வரியின் மருத்துவ செலவுக்கு கட்ட வேண்டிய பணம் எவ்வளவு என கேட்கிறார்.

தனது மனைவியின் இந்த நிலைமைக்கு காரணமான குணசேகரன் திடீரென இப்படி நல்லவராக மாறிவிட்டாரே என ஜனனி சந்தேகப்படுகிறார். இதற்கு பின் குணசேகரன் என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.