தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.



உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் தாய் கிழவி படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்தஇப்படத்திற்குமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூலில் எந்த ஒரு சரிவையும் முதல் நாளில் இருந்து இப்படம் சந்திக்கவில்லை. நேற்று இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினார்கள்.

வசூல்

இந்த நிலையில், 13 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் தாய் கிழவி படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 13 நாட்களில் ரூ. 57.9 கோடி வசூல் செய்துள்ளது.

தாய் கிழவி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து சேயோன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.