சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், முத்து-மீனாவிற்கு ஒரு நல்ல விஷயம் நடக்கிறது.



பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ - Related Image

அதாவது முத்து காப்பாற்றிய மனநலம் பாதிக்கப்பட்ட பையனின் பெற்றோர்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு ஏதாவது உதவி செய்ய விரும்புவதாக கூறுகிறார். நான் ஒரு Corporate கம்பெனியில் வேலை செய்கிறேன், இந்த அபார்ட்மென்ட் Secretary நான்.

நீங்கள் ஒரு வேன் வாங்குங்கள் நான் உங்களுக்கு சவாரிகள் பிடித்து தருகிறேன். இந்த அபார்ட்மென்டில் கூட நிறைய பேர் சுற்றுலா எல்லாம் செல்வார்கள் என்றார். முதலில் முத்து பணம் வேண்டும் என தயங்க அவர் அதற்கும் சில உதவிகள் செய்வதாக கூற முத்து-மீனா ஓகே கூறுகிறார்கள்.

இன்றைய எபிசோடில் நடந்த நல்ல விஷயம் இதுதான்.

புரொமோ

விஜயா தனது மகன் மனோஜை அழைத்துக்கொண்டு பெண் பார்க்க செல்கிறார்.

அங்கு மனோஜ், பெண்ணை பார்த்ததும் அப்படியே மயங்குகிறார், எனக்கு ஏற்ற பெண்ணை நீங்கள் பார்த்துள்ளீர்கள் என தனது அம்மாவிடம் கூறுகிறார். பின் விஜயா பெண் வீட்டாரிடம் பேசும்போது விஜயாவின் அப்பாவை பற்றி எல்லாம் கூற அப்போது நாம் உறவினர்களா என விஜயா கேட்கிறார்.

உடனே அவர் உறவு முறையில் பையனுக்கு இந்த பெண் தங்கை முறை வருகிறார் என சொன்னதும் மனோஜ் ஷாக் ஆகிறார்.