

குக் வித் கோமாளி
கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் தொடங்கியது. வழக்கம் போல் இல்லாமல், இந்த முறை நட்சத்திர ஜோடிகளை போட்டியாளர்களாக களமிறக்கியுள்ளனர்.

இதில், கானா வினோத் - பாக்கியா, நிஷா - ரியாஸ், மனோ - ஜமீலா, அனிருதா ஸ்ரீகாந்த் - சம்யுக்தா உள்ளிட்ட 8 ஜோடிகள் என்ட்ரி கொடுத்துள்ளனர். கடந்த வாரம் முதல் நாள் என்பதால் அனைவருக்கும் அவரவர்களுக்கு பிடித்தபடி சமையல் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் ஒவ்வொரு ஜோடிகளுக்கு இடையே Face Off போட்டி தொடங்கிவிட்டது.
வெளியேறிய முதல் ஜோடி
இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 7-ல் இருந்து முதல் ஜோடியாகமனோ- ஜமீலா வெளியேறியுள்ளனர். ஆனால், இவர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறவில்லை, பின்னணி பாடகர் மனோ அவர்கள் தனது சொந்த காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார்.
இது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. மனோ - ஜமீலா வெளியேறிய நிலையில், 8-வது ஜோடியாக சித்து - ஸ்ரேயா ஜோடி களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Entertainment News