


சிறகடிக்க ஆசை
ஒரு அம்மா மகனுக்காக இப்படியெல்லாம் செய்வாரா என நினைக்கும் அளவிற்கு சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு பிள்ளையை உயர்த்தி பேசி இன்னொரு பிள்ளையை மட்டமாக பேசும் ஒரு அம்மா சிறகடிக்க ஆசை சீரியலில் உள்ளார்.

இப்போது கதையில் மனோஜிற்கு ரோஹினி விவாகரத்து விஷயத்தில் நடந்த உண்மையை மறைத்து விஜயா தனது மகனுக்கு மறுமணம் செய்துவைக்க பார்த்தார். ஆனால் ரோஹினியால் தற்போது அந்த திருமணம் நின்றது.
விஜயா-மனோஜ் விவாகரத்து விஷயத்தில் மறைத்த விஷயம் அண்ணாமலைக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
புரொமோ
இப்போது சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் சிந்தாமணி மற்றும் வட்டி விடும் நபர் அண்ணாமலை வீட்டிற்கு வந்து விஜயா-மனோ4 வீட்டை அடமானம் வைத்த விஷயத்தை கூறுகின்றனர்.
அண்ணாமலை நான் கையெழுத்து போடவே இல்லையே என கூற நீங்கள் கையெழுத்து போட்டதாக தான் உங்கள் மனைவி கொடுத்தார் என்கிறார். அதைக்கேட்டு அண்ணாமலை மற்றும் குடும்பத்தினர் செம ஷாக் ஆகிறார்கள்.
என் இத்தனை வருஷ உழைப்பை எடுத்துக்கொண்டு ஓடின இப்போது எனது கையெழுத்து போட்டு என்னை கடன் காரன் ஆக்கிவிட்டாய் என கூறி மனோஜிற்கு பளார் விடுகிறார். இதோ அந்த புதிய புரொமோ,
You May Like This Video
Source: Entertainment News