Love Insurance Kompany

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany.



இரண்டு நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? - Related Image

இப்படத்தை லலித் குமார் மற்றும் நயன்தாரா தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, கௌரி ஜி. கிஷன், சீமான், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல்

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், Love Insurance Kompany திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.