

கர
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கர.

போர் தொழில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். மேலும், தனுஷுடன் விக்னேஷ் ராஜா கூட்டணி அமைத்ததும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
வசூல்
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பைகரதிரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. படம் பார்த்த பெரும்பான்மையானவர்கள் கலவையான விமர்சனங்களையே முன்வைத்தனர். இதனால் வசூலும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், 5 நாட்களில் கர திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் ரூ. 39.5 கோடி வசூல் செய்துள்ளது.
Source: Entertainment News