

கருப்பு படம்
கருப்பு என்றால் முதலில் நிறம் மக்களுக்கு நியாபகம். அடுத்து கருப்பசாமி, இப்போது அவரை தாண்டி சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் தான் இனி அனைவருக்குமே நியாபகம் வரும்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா என பலர் நடிக்க நேற்று (மே 15) வெளியாகி இருந்தது. மாஸ் மற்றும் செம மெசேஜ் கலந்த கதையுடன் படம் தயாராகி இருந்தது.
சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டு, சூர்யா சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் வெளியான முதல் நாளிலேயே விமர்சனங்கள் அமோகமாக வர ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
முதல் நாளிலேயே சூர்யாவின் கருப்பு படம் மொத்தமாக ரூ. 35 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.
வீடியோ
நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்கள் நடித்து வெளியிட்டாலும் மிகப்பெரிய ஹிட் என எதுவும் அமையவில்லை. கடந்த ஆண்டே இந்த கருப்பு படம் வெளியாக வேண்டியது, ஆனால் சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
ஒருவழியாக சூர்யா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த கருப்பு வெளியாகிவிட்டது, செம சூப்பர் டூப்பர் ஹிட்டும் ஆகிவிட்டது.
இந்த நிலையில் படத்திற்கு மக்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் சந்தோஷத்தில் நடிகர் சூர்யா படக்குழுவினர், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதோ,
View this post on InstagramA post shared by Suriya Sivakumar (@actorsuriya)
View this post on InstagramA post shared by Suriya Sivakumar (@actorsuriya)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Suriya Sivakumar (@actorsuriya)
Source: Entertainment News