எதிர்நீச்சல் தொடர்கிறது

அவ்வளவு அராஜகம் செய்த குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என போராடி வருகிறார் ஜனனி.



ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ - Related Image

ஆனால் நான் என்ன தவறு செய்தாலும் தண்டனை அனுபவிக்க மாட்டேன், எதாவது கிரிமினல் வேலை செஞ்சாவது தப்பிப்பேன் என பல பிளான் போடுகிறார் குணசேகரன்.

வீட்டில் இருந்தால் மற்றவர்களை போல தன்னையும் எமோஷ்னல் பிளாக் மெயில் செய்வது, ஏதாவது டிராமா போட்டு நீதிமன்றம் வர விடாமல் செய்வார்கள் என வெளியே வந்துவிட்டார்.

அவர்களுக்கு தெரியாத இடத்தில் ஜனனி தங்கியுள்ளார்.

குணசேகரன் Vs ஜனனி போராட்டத்தில் கண்ணுக்கு தெரியாத வில்லனாக விளையாடி வருகிறார் ராணா ஆதிமுத்து.

புரொமோ

இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரிக்கு ஜனனி மீது அதிக கோபம் வர வழைக்கும் வகையில் எல்லா நாடகத்தை செய்து வருகிறார்கள் கதிர் மற்றும் ஞானம்.

நமது எதிரி சாருபாலாவுடன் இணைந்து ஜனனி-சக்தி பேசும் வீடியோவை காட்டுவது, அடியாட்களை வைத்து ஜனனி திட்டம் போடுகிறார் என என்னென்வோ கூறுகிறார்கள். வழக்கில் என்ன ஆகும் என பரபரப்பாக கதை செல்ல திருமண ஏற்பாடும் நடக்கிறது.

விடுமுறை கேட்டு வீட்டில் இருந்த தர்ஷனுக்கு ஆபிஸில் அவசர வேலை என கூற அவர் கிளம்பிவிடுவார் போல் தெரிகிறது, இவரால் அடுத்த பிரச்சனை துவங்குமா என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.